Press "Enter" to skip to content

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

ஸ்ரீரங்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே தனியாரின் அடுக்குமாடி குடியுருப்பு வீடுகள் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனைக்கு என்று அனைத்து நாளிதழ்களிலும் அறிவிப்பு  வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால் சிக்கல் இல்லை. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே என்று குறிப்பிட்டிருந்ததுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

                                 

இந்த விளம்பத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நவீன தீண்டாமையை வெளிப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை எதிர்ப்பு முன்னணியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.