தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை 

தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை 

தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டிற்கான தீபாவளி வரும் 27 ஆம் தேதியான ஞாயிற்றுகிழமை வருகிறது. இதனால் திபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என இருந்தது. 

இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh