Press "Enter" to skip to content

70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ – மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி

நாகை அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் சூளிகாம்பாள் என்ற 70 வயதுடைய பெண் யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் சூலிகாம்பாள் என்ற 70-வயதுடைய பெண் யானை இருந்தது. இந்த யானை வயது முதிர்வின் காரணமாக இன்று காலை 11-மணியளவில் கோயில் வளாகத்தில் உயிரிழந்தது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உயிரிழந்த யானையின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவிலின் அருகே உள்ள முருகநாயனார் தோட்டத்தில் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.