மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

இராசிபுரம் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த  ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக அம்மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது குறித்து மாணவிகள், “ நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து  கூறுவார். அத்துடன்  ஆபாசமாக சில வார்த்தைகள் கூறுவார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

(ஆசிரியர் சுரேஷ்)

மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh