மனைவிக்கு வரதட்சணை கொடுமை : காவல் துறை கணவர் சிறையில் அடைப்பு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை : காவல் துறை கணவர் சிறையில் அடைப்பு

கோவையில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28). இவர் கோவையிலுள்ள 4 ஆவது பெட்டாலியன் சிறப்பு போலீசாராக பணிபுரிந்து வருகிறார். இவரும் கோவை வெங்கிட்டாபுரம், கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 23) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து, இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் ஜெயக்குமார் தொடர்ந்து கீர்த்தனாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் மனைவியையும், குழந்தையையும் கண்டு கொள்ளாமல், அவர்களுடைய அடிப்படை தேவைக்கு கூட பணம் கொடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக தெரிகிறது. மேலும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து கீர்த்தனா கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh