சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தமிழகத்திலிருந்து செல்லும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையிலிருந்து 55 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படவுள்ளன. திருச்சி, மதுரை, புதுச்சேரியிலிருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் நாள்தோறும் சபரிமலைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 64 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும் என்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 

இந்த சிறப்பு பேருந்துகளுக்கு இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். போக்குவரத்து கழகத்தின் tnstc மற்றும் RED BUS,BUSINDIA, PAYTM, MAKEMYTRIP,GOIBBO உள்ளிட்ட வலைத்தளங்களில் கணினிமய மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh