திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார் !

திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார் !

விசிக தலைவர் திருமாவளவன் மீது கிண்டி காவல் நிலையத்தில், இந்து முன்னணி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை இந்து முன்னனி சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வே.நித்தியானந்தம் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், “சமீபத்தில் புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டத்தில் அதன் தலைவர் திருமாவளவன் திட்டமிட்ட வகையில் இந்து தெய்வங்களை இழிபடுத்தியுள்ளார். இந்து மத உணர்வுகளையும், அதன் நம்பிக்கைகளையும், அவமதித்துள்ளார். அத்துடன் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார். 

அவர் பேசும் காணொளி இந்துக்கள் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது. இத்தகைய செயலில் ஒரு மக்களவை உறுப்பினர் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது 295, 295(A), 153(A), உள்ளிட்ட பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh