“பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்த 10 நிமிடங்கள்”- செங்கோட்டையன்..!

“பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்த 10 நிமிடங்கள்”- செங்கோட்டையன்..!

பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், குழந்தைகள் தினம் மற்றும் மருத்துவர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இனி பள்ளிகளில் வேலைநேரத்தில் மணவர்கள் தண்ணீர் அருந்த ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகும் 10 நிமிடம் ஒதுக்கப்படும். ஏனெனில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதை தவிர்த்து மாணவர்கள் ஆரோக்கியத்துடன், வாழவும், கல்வி கற்கவும் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh