உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் அதிமுகவில் இன்று தொடங்குகிறது. இன்றும், நாளையும் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. 

அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட தலைமை அலுவலகங்களில் அதற்கான கட்டணங்களை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கெனவே கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமனு விநியோகம் இன்று தொடங்குகிறது. 

மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 25 ஆயிரம் என்றும், வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், இதேபோல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருப்ப மனுக்களை வாங்குவோர், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் அளிக்கலாம்.  அதற்கான நிர்வாகிகள் பட்டியலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai