கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் – சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர் 

கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் – சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர் 

கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் தனது முழக்காலுக்கு கீழான பகுதியை இழந்துள்ள ராஜேஷ்வரிக்கு மருத்துவ உதவிக் கேட்டு அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக பொதுமக்களிடம் ‘க்ரெளடு ஃப்ண்ட்’ கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

54 வயது நிரம்பிய சித்ராவின் முகத்தில் சோகம் மொத்தமாக குடியேறி இருக்கிறது. அவர் முகத்தில் மலர்ச்சி இல்லை. அவர் கோயமுத்துரில் பரபரப்பாக இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் முன் செய்வது அறியாது அமர்ந்திருக்கிறார். அவரது விழிகளில் பெரிய எதிர்பார்ப்பு தென்படுகிறது. சித்ராவின் நினைவுகள் முழுக்க அவரது மகள் ராஜேஷ்வரியே நிரம்பி இருக்கிறார். அவரது மகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என அவரைக் கவலைகள் பிய்த்து தின்றுக் கொண்டிருக்கின்றன. மகள் ராஜேஷ்வரி அறுவை சிக்கிச்சைக்குப் பிறகும் இன்னும் ஐசியுவில் இருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி அவர் தனது இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்துள்ளார். முற்றிலுமாக அந்தப் பகுதிகள் அவரது காலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. 

என்ன இன்னும் உங்களுக்கு யார் என்று புரியவில்லையா?. சில நாட்களுக்கு முன்னாள் கோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. அந்த விபத்தில் அவ்வழியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ராஜேஷ்வரி நிலைத்தடுமாறி விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த பார வண்டி ஏறியது. அந்த விபத்தில் சிக்கிய அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் சர்ச்சையை எழுப்பியது. 

இந்த விபத்தை ஏற்படுத்திய பார வண்டியின் ஓட்டுநர் அதிவேகமாக வண்டியை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. விசாரணை செய்த காவல்துறையினர் விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகளை எடுத்தனர். அதில் விபத்துக்கான காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆகவே அதனை வைத்து வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய ராஜேஷ்வரி இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை. நாகானந்தன் மற்றும் சித்ரா தம்பதியினருக்கு ஒரே மகள் ராஜேஷ்வரி. இவர் ஒரு பிபிஏ பட்டதாரி. குடும்பத்துடன் சிங்காநல்லூரில் வசித்து வந்த இவரது குடும்பம் சில தினங்களுக்கு முன் கோவைக்கு மாறியது. அங்குள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் ராஜேஷ்வரி சில வாரங்களுக்கு முன்புதான் அக்கெளண்ட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இவரது குடும்பம் இப்போது இந்த விபத்தால் மேலும் சிரமத்தை சந்தித்து வருகிறது. 

அறுவைச் சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆகவே அந்தக் குடும்பத்தினர் பொதுமக்களிடம் நிதி உதவிக்கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக அவரது மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நல்ல மனம் படைத்தவர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவலாம். உதவி செய்ய விரும்புகின்றவர்கள் இந்தச் சுட்டியை அழுத்தி உதவவும்.  

https://milaap.org/fundraisers/support-rajeshwari-naganathan?utm_source=facebook&utm_medium=fundraisers-header&mlp_referrer_id=141779Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh