“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..!” – பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்

“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..!” – பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் மர்மங்கள் இருப்பதை அவரின் பெற்றோர்கள் கேள்விகளால் உணர்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் இன்று சென்னை டிஜிபி-யை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். pic.twitter.com/Fc39OUy2Mr— M.K.Stalin (@mkstalin) November 15, 2019 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh