கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் கணக்கில் வராத ரூபாய் 32 கோடி பறிமுதல் – தொடரும் சோதனை

கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் கணக்கில் வராத ரூபாய் 32 கோடி பறிமுதல் – தொடரும் சோதனை

கரூரில் தொழிலதிபர் வீட்டிலிருந்து 32 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கரூரில் கொசு வலை தயாரிப்பு நிறுவனத்தில் மூன்றாம் நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது. சிவசாமி என்பவருக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு நிறுவனம் மற்றும் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நேற்றைய சோதனையின் போது 32 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்களும் சிக்கின. 

மூன்றாம் நாளாக இன்று வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. மேலும், தாந்தோன்றிமலை தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையிலும் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh