மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேடப்பட்ட முக்கிய நபர் நீதிமன்றத்தில் சரண்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேடப்பட்ட முக்கிய நபர் நீதிமன்றத்தில் சரண்

கோவையில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான மணிகண்டன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

கோவை மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் பூங்கா ஒன்றுக்கு சென்றார். அப்போது நண்பர்களுள் ஒருவரான மணிகண்டன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடன் இருந்த சக நண்பர்கள் இதனை காணொளி எடுத்துள்ளனர். அந்த மாணவி இது தொடர்பாக பெற்றோரி‌டம் தெரிவிக்கவே, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

சரியான அளவில் சுடிதார் தராத துணிக்கடை – 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு 

இதனை அடுத்து ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி உள்ளிட்டோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய நபரான மணிகண்டனை தேடி வந்த நிலையில், அவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

‘பாதிரியார்களின் பாலியல் தொல்லை குறித்த புத்தகம் வெளியிடுகிறேன்’ – கன்னியாஸ்திரி லூசிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh