சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு : திருவாரூரில் சோகம்

திருவாரூர் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார். 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் திருவாரூர் அருகே உள்ள பூங்கா ஊரில் செல்லையன் (75) என்ற முதியவர், தனது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுற்றுச்சுவர் இடிந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் கைது 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மழை காரணமாக 160 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் தற்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

“என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரவி” – மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai