விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழக அரசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சித்து 2013, 2014ஆம் ஆண்டுகளில் பேசியதாக தேமுதிக மீது தமிழக அரசு சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. 2012-16 வரை தமிழக அரசு சார்பில் மொத்தம் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இத்துடன், பிற வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராகி வந்தார்.

      

“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா..! – தங்கம் தென்னரசு கண்டனம்

இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்ககுளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனையடுத்து, அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. 5 வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், பிற 3 வழக்குகளை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai