மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர் தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் தோட்டப்பாளையம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி வேளாங்கண்ணி(39). இவர்களுக்கு ஷாலினி(19) என்ற ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆரோக்யதாஸ் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். வேளாங்கண்ணிக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

(வேளாங்கன்னி)

இந்நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி ஆரோக்கியதாஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். எனவே வேளாங்கண்ணியின் சிறுநீரகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதேபோல் இதயம் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ – சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்

 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai