TopNews | சுற்றுச்சுவர் உரிமையாளருக்கு காவல் முதல் சிதம்பரம் பிணை மனு தீர்ப்பு வரை

TopNews | சுற்றுச்சுவர் உரிமையாளருக்கு காவல் முதல் சிதம்பரம் பிணை மனு தீர்ப்பு வரை

சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல். 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் ‌என அறிவிப்பு.

சுற்றுச் சுவர் விழுந்த விபத்தில் கைதான உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவல். 

பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் காவலன் கைப்பேசி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவு.

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு. பல இடங்களில் வீடு‌களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி.

வெங்காய உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை. சில்லறை வியாபாரிகள் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது என அறிவிப்பு.

ஐஎன்எக்ஸ் ஊடகம் வழக்கில் ப.சிதம்பரத்தின் பிணை மனு மீது இன்று தீர்ப்பு.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியானார் சுந்தர் பிச்சை.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh