தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது குறைந்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு இன்னும் 14 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பெருமளவில் மழை இருக்காது என கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh