மகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

மகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர்கள் கோபால்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்களின் மகள் மாரிசெல்வி (13). திக்குவாய் பாதிப்பு இருந்த மாரிச்செல்வி மந்தித்தோப்பில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தார். திடீரென அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரிசெல்வியை அவரது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். 

தீக்காயமடைந்த மாரிசெல்வி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது தாய் ராஜேஸ்வரி தீ வைத்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் ராஜேஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் இன்று குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh