சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, அடையாறு, திருவான்மியூர், தேனாம்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், தரமணி, வேளச்சேரி, தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் பெய்த மழை காலை வரை நீடித்தது. புதுக்கோட்டையில் உள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கந்தர்வகோட்டை, அன்னவாசல், சித்தன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

கடலூரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதே போன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம், வில்லியனூர், பாகூர், கரிக்கலாம்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய இடங்களில் கன மழை பெய்தது.

இதனிடையே தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பைக்கில் புகுந்த நல்ல பாம்பு நீண்ட போராட்டத்திற்கு பின்பு மீட்பு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh