சிபிசிஐடி காவல்துறையினர் போல் நடித்து 8 பவுன் தங்கம் திருட்டு-  போலீசாக நடித்த இருவர் கைது

சிபிசிஐடி காவல்துறையினர் போல் நடித்து 8 பவுன் தங்கம் திருட்டு- போலீசாக நடித்த இருவர் கைது

காஞ்சிபுரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் என கூறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். 

காஞ்சிபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர் வீட்டிற்க்கு வந்த இருவர் தாங்கள் சிபிசிஐடி காவல் துறையினர் என கூறி தங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி வீட்டில் பல இடங்களில் சோதனை செய்வதாக நடித்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மருத்துவர் கோபிநாத் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மருத்துவர் கோபிநாத் வீட்டில் கொள்ளையடித்த குமாரசாமி மற்றும் திபாகர்பர்மா ஆகிய இருவரும் போலி சிபிசிஐடி காவல் துறையினர் என தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 8 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh