மனைவியை எரித்துக் கொன்ற கணவர் – ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகன்கள்

மனைவியை எரித்துக் கொன்ற கணவர் – ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகன்கள்

தென்காசியில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையில் மனைவியை கணவர் தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பி நாடார்பட்டியை சேர்ந்தவர் அனைந்த பெருமாள் (55). இவரது மனைவி பன்னீர் (50). இவர்களுக்கு திருமணமாகி கனகராஜ், திருமலை செல்வன் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதால், அனந்த பெருமாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு வருடங்களாக அவர் மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்தாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே அவர்களின் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவியுடன் சண்டை போட்ட அனந்த பெருமாள், “நீ தான் செய்வினை செய்து என் குடும்பத்தை கெடுத்து விட்டாய்” என திட்டியுள்ளார். பின்னர் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அவரது மனைவிக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த அனைந்த பெருமாள் மீது தீப்பிடித்துள்ளது. 

இதையடுத்து இருவரும் வலியால் அலற, அருகில் வசிப்பவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 108 உதவூர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில் அனந்த பெருமாளின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனைந்த பெருமாள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி காவல்துறையினர் போல் நடித்து 8 பவுன் தங்கம் திருட்டு-  போலீசாக நடித்த இருவர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh