“துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” – ரஜினிகாந்த்

“துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” – ரஜினிகாந்த்

“துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” – ரஜினிகாந்த்Jan 14, 2020 20:03:02 pmJan 14, 2020 20:17:04 pmWeb Team

முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

பின்னர், பேசிய ரஜினி, “முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி” என்றார்.
https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/78965.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh