700 காளைகள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… தயார் நிலையில் காளையர்கள்.!

700 காளைகள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… தயார் நிலையில் காளையர்கள்.!

700 காளைகள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… தயார் நிலையில் காளையர்கள்.!Jan 15, 2020 07:54:55 amJan 15, 2020 07:57:38 amWeb Team

 
பல சர்ச்சைகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கவுள்ளது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கின்றன.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடல்தகுதி மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்க அனுமதிக்கப்படுவர். காலை 8 மணிக்கு உறுதிமொழி எடுக்கப்பட்டு தொடங்கப்படும் போட்டி, மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சையால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்‌சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டையொட்டி 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக வாடிவாசலில் இருந்து 8 அடி உயரத்தில் இரட்டை அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு‌ள்ளன. வாடிவாசலில் இருந்து பத்து அடி தூரம் வரை தேங்காய் நார்கள் பரப்பப்பட்டுள்ளன. போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்ப‌ட்டுள்ளன. காளைகளை பரிசோதிக்கவும், மாடுபிடி வீரர்களை பரிசோதிக்கவும், காயமடைபவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யவும் தலா பத்து மருத்துவர்களை கொண்ட 5 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே அதிக மாடுகளை பிடித்த வீரர்கள், அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்படுவர்.
காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள், இரண்டு இருசக்கர 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.கால்நடைகளுக்கான 2 ஆம்புலன்சுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/78974.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh