வெள்ளியை உருக்கிக் கொட்டியதுபோல உறைபனி.. காண்போர் பரவசம்..!

வெள்ளியை உருக்கிக் கொட்டியதுபோல உறைபனி.. காண்போர் பரவசம்..!

வெள்ளியை உருக்கிக் கொட்டியதுபோல உறைபனி.. காண்போர் பரவசம்..!Jan 15, 2020 09:04:04 amJan 15, 2020 09:10:02 amWeb Team

கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளில் வெள்ளியை உருக்கிக்கொட்டியது போன்று காட்சியளிக்கும் உறைபனி காண்போரை கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில் உள்ள குண்டஞ்சோலை, பூம்பாறை, பாரிக்கோம்பை, கூக்கால் உள்ளிட்ட படுகை மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே உறைபனி இருந்து வருகிறது. குறிப்பாக மன்னவனூர் சூழல் சுற்றுலாத் தலத்தில் உள்ள ஆயிரத்து 200 ஏக்கர் புல்வெளி முழுவதும் பனிப்போர்வை போர்த்தியதுபோல் காணப்படுகிறது.

காலை 8 மணி வரை நீடிக்கும் உறைபனி, சூரிய உதயத்திற்கு பின் உருகத்தொடங்குகிறது. வெயில் பட்டு பனி உருகி ஆவியாகும் காட்சி அனைவரையும் பரவசப்படுத்துகிறது.

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..! 
இந்த உறைபனி இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் எனவும், சுற்றுலாப் பயணிகள் பனிமலையைக் காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலா அலுவலர் தெரிவித்துள்ளார்.https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/78978.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh