விமான நிலையம்டில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து ‘பொங்கல் வாழ்த்து’

விமான நிலையம்டில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து ‘பொங்கல் வாழ்த்து’

ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து ‘பொங்கல் வாழ்த்து’Jan 15, 2020 17:02:30 pmJan 15, 2020 17:38:51 pmWeb Team

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.
#HappyPongal2020 Passengers greeted with Sakkarai pongal on their arrival @aaichnairport today.#HappyMakarSankranti @AAI_Official pic.twitter.com/8YVt6lkVTB— Chennai (MAA) Airport (@aaichnairport) January 15, 2020
வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாடை உடுத்தி‌, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகள் பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் வெளியேவரும் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/78992.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh