பெரியார் விருது சர்ச்சை முதல் ஐசிசி விருதுக்கு தேர்வான ரோகித் சர்மா வரை

பெரியார் விருது சர்ச்சை முதல் ஐசிசி விருதுக்கு தேர்வான ரோகித் சர்மா வரை

பெரியார் விருது சர்ச்சை முதல் ஐசிசி விருதுக்கு தேர்வான ரோகித் சர்மா வரைJan 16, 2020 07:36:26 amJan 16, 2020 07:36:27 amWeb Team

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆயிரத்து 450 கோடி ரூபாய் நிதி திரட்டல். காங்கிரஸ் கட்சிக்கு 383 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உற்சாகத்துடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு. 14 காளைகளை அடக்கி விஜய் என்ற இளைஞர் சிறந்த வீரருக்கான பரிசைப் பெற்றார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால்தான் திமுகவினால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து. காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் திமுக சார்பில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் பேச்சு.
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தைக்காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள். மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை சென்ற பக்தர்கள் ‘சுவாமி சரணம் ஐயப்பா’ என கோஷமிட்டு பரவசம்.
தமிழகத்தில் முதன்முறையாக ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு. ஏலம் விடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக தகவல்.

பெரியார் விருதுபெற ஆள் இல்லையா? என மு.க.ஸ்டாலின் கேள்வி. இதனிடையே பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வீடியோ வெளியிட்டு தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்து. பொங்கலை போலவே மகிழ்ச்சி பொங்கி வழியட்டும் எனப் பேச்சு.
2019ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதிற்கு இந்தியாவின் ரோகித் சர்மா தேர்வு. ஒட்டுமொத்த அளவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் விருதுக்கு இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிப்பு.https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79004.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh