காவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றி

காவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றி

காவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றிJan 16, 2020 11:36:22 amJan 16, 2020 11:36:26 amWeb Team

கோரிக்கையை ஏற்று காவிநிற உடை அணிந்த வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடுவிற்கு நன்றி என தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பகிர்ந்தார். மேலும், தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
Thank you Vice-president Respected Venkiah Sir., Much respect and regards for deleting the Saffronised Thiruvalluvar picture and replacing with the Government official picture as requested.??.#VictoryDMK pic.twitter.com/2pGSIqovnI— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 16, 2020
ஆங்கிலத்தில் போட்ட பதிவிற்கு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும், தமிழில் இட்ட பதிவில் வெள்ளை நிற உடை அணிந்து எவ்வித மதச் சாயமும் இல்லாமல் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தையும் வெங்கையா நாயுடு பகிர்ந்திருந்தார். ஆனால் சிலமணிநேரத்திற்குப் பிறகு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.
இந்நிலையில், கோரிக்கையை ஏற்று காவிநிற உடை அணிந்த வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடுவிற்கு நன்றி என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79013-1.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh