73 ஆண்டுகள் இணைப்பிரியாத தம்பதி – இறுதிப் பயணமும் ஒன்றாக அமைந்த சோகம்

73 ஆண்டுகள் இணைப்பிரியாத தம்பதி – இறுதிப் பயணமும் ஒன்றாக அமைந்த சோகம்

73 ஆண்டுகள் இணைப்பிரியாத தம்பதி – இறுதிப் பயணமும் ஒன்றாக அமைந்த சோகம்Jan 16, 2020 13:01:23 pmJan 16, 2020 13:01:29 pmWeb Team

மேட்டூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆர்.எஸ். பாரதி நகரை சேர்ந்தவர் பச்சைமுத்து (96). இவரது மனைவி குள்ளம்மாள் (90). இந்தத் தம்பதிக்கு மூன்று ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர். மில் தொழிலாளியாக பணியாற்றி வந்த பச்சமுத்து கவுண்டருக்கும் குள்ளம்மாளுக்கும் திருமணமாகி 73 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குள்ளம்மாளுக்கு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குள்ளம்மாள் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இருந்த அவரது கணவர் பச்சமுத்து கவுண்டரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
73 ஆண்டுகள் ஒன்றாகவே இணைபிரியாமல் இருந்த இந்தத் தம்பதி இறுதிப் பயணத்திலும் ஒன்றாகவே பயணித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79015.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh