தொடர்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் கைது

தொடர்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் கைது

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் கைதுJan 16, 2020 14:06:38 pmJan 16, 2020 14:19:49 pmWeb Team

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கரவாகனம் திருட்டு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து ராசிபுரம் மாவட்டத் துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் மேற்பார்வையில் ராசிபுரம் காவல்ஆய்வாளர் பாரதிமோகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இருசக்கரவாகனத்தில் வந்த நபரை போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், ஆத்தூரை அடுத்துள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ரவி(எ) ரவிச்சந்திரன் என்பதும் இவர்மீது ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட காவல்நிலைய பகுதிகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது.
மேலும் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதாக இவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மொத்தம் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79017.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh