நாளை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – இறுதி கட்டப் பணிகள் ஆயத்தம்

நாளை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – இறுதி கட்டப் பணிகள் ஆயத்தம்

நாளை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – இறுதி கட்டப் பணிகள் ஆயத்தம்Jan 16, 2020 20:22:46 pmJan 16, 2020 20:22:48 pmWeb Team

உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை காலை 7.30 மணி முதல் நடைபெற உள்ளது.
நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 920 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண 100 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் அழைத்துவரப்படுகிறார்கள். இதேபோல, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து 58 பேர் ஜல்லிக்கட்டு சுற்றுலாவாக அழைத்து வரப்படுகிறார்கள். நாளை ஜல்லிக்கட்டையொட்டி இப்போதே வெளிமாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்ட வண்ணம் உள்ளன.
இதனால், அலங்காநல்லூர் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய தலைமுறையில் நேரலையாக ஒளிரப்பு செய்யப்படவுள்ளது.
பெரியார் விருது சர்ச்சை முதல் ஐசிசி விருதுக்கு தேர்வான ரோகித் சர்மா வரைhttps://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79029.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh