‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்குJan 28, 2020 18:44:25 pmJan 28, 2020 18:44:28 pmWeb Team

அவதூறான வகையில் பேசி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் இரண்டு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியுள்ள ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், தமிழக அரசு நல்லாட்சி பட்டியலில் இடம்பெற்றது குறித்தும் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh