ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக-திமுகவினர் இடையே கைகலப்பு

ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக-திமுகவினர் இடையே கைகலப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற முதல் ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த ஒ‌ன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவில்லை எனக் கூறி அதிமுகவினர் ‌வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறி வட்டார வளர்ச்சி அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. இதையடுத்து காவல்துணை கண்காணிப்பாளர் அசோகன் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
 
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh