கக்கனின் பேத்திக்கு குடியரசுத் தலைவரிடம் விருது – கிராம மக்கள் பாராட்டு

கக்கனின் பேத்திக்கு குடியரசுத் தலைவரிடம் விருது – கிராம மக்கள் பாராட்டு

எளிமையின் உதாரணமாக இருந்த முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் பேத்தி, சிறந்த காவல் துறை அதிகாரியாக, குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது, பெருமையாக உள்ளதாக, கக்கனின் சொந்த ஊரான மேலூரைச் சேர்ந்த கிராமமக்கள் பாராட்டியுள்ளனர்.
மேலூரை அடுத்து தும்பைப்பட்டியை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சரின் கக்கனின் பேத்தியான ராஜேஸ்வரி, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் குடியரசு தின விழாவில், சிறந்த காவல் துறை அதிகாரிக்கான விருதை பெற்றுள்ளார்.

தாத்தா கக்கனைப் போன்று, அவருடைய பேத்தியும், சாதித்துள்ளதாகவும், ஏழ்மையிலும் சாதிக்க நினைக்கும் பலருக்கும் தூண்டுகோலாக உள்ளதாகவும் கக்கனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் கிராமசபைக் கூட்டத்திலும் அவரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh