குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரனா பாகிஸ்தானுக்கும் பரவியது. சந்தேகத்தின் பேரில் மும்பையில் 8 பேருக்கு தீவிர கண்காணிப்பு.
குரூப் 4 முறைகேட்டில் சந்தேகிக்கப்படும் சிவகங்கையை சேர்ந்த காவலர் சித்தாண்டி தலைமறைவு. காவலரின் சகோதரரை பிடித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை.

குரூப் 2ஏ தேர்விலும் நடந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விசாரணை. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி.
குரூப் 4 முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் கோரிக்கை. பணியாளர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை நீக்கவும் வலியுறுத்தல்.

எல்.கே.ஜிக்கு நுழைவுத் தேர்வு எழுதும்போது 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாதா?: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய விளக்கம்.
தஞ்சை குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல்.
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் பரவுகிறது. தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் பேட்டி.
‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று ஜாமீன்
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh