நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் ‌3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கிய இடங்களுக்குச் செல்ல இயக்கப்படும் வாடகை கார், share taxi சேவைகளும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நேரத்தில் எதிர்பார்த்த அளவு வருவாய் ஈட்டவில்லை என்றும், பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது மக்களிடையே படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh