சிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: 2 பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை

சிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: 2 பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் சுவரில் ஓவியம் வரைந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர்விடுவித்தனர்.

ஒரு வாரத்தில் கொரனா பல மடங்கு அதிகரிக்கக் கூடும் – சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை 
காஞ்சிபுரம் புதிய ரயில்வே சாலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு பெண்கள் சுவர் ஓவியம் வரைந்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, அந்த பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ 
அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அந்தப் பெண்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து இரண்டு பேரையும் சிவகாஞ்சி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh