தேசப்பக்தி கொண்டவர் எனக்கூறப்படும் ஒருவரால் காந்தி படுகொலை – கமல்ஹாசன்

தேசப்பக்தி கொண்டவர் எனக்கூறப்படும் ஒருவரால் காந்தி படுகொலை – கமல்ஹாசன்

 
தேசப்பக்தி கொண்டவர் எனக்கூறப்படும் ஒருவரால் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
தேசப்பிதா காந்தியடிகளின் 73-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது படத்திற்கும், உருவ சிலைக்கும் பலதரப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்தி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ”சீர்திருத்தப்பட்ட உலகில் விமர்சனத்தின் மிக மலிவான வடிவம்தான் படுகொலை. உலக அமைதிக்கான தூதராகவும் என்னுடைய வழிகாட்டியாகவும் இருந்த ஒருவர், தேசப்பக்தி கொண்டவர் எனக்கூறப்படும் ஒருவரால் இன்றைய நாளில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக காந்தியை நாம் நினைவில் கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவினர் கூட பேசுகின்றனர்; ஆனால் திமுகவினர் கண்டுகொள்வதில்லை: மு.க.அழகிரி
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh