மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், யுத்தபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியதாரா, குற்றவாளி கோபிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh