லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய காவல் ஆய்வாளர்

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய காவல் ஆய்வாளர்

ராமநாதபுரம் அருகே லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இடையத்தூர் மேலகுடியிருப்பைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஹேமலதா. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 20 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் இருந்து ஒரு பெண்ணை விடுவிக்க பார்த்திபனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராஜன் 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், 5 ஆயிரம் ரூபாய் கேட்டு அவர் வற்புறுத்தவே, பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜராஜனிடம் வழங்கியுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக‌ காவல்துறையினர் ராஜராஜனை கையும் களவுமாகப் பிடித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh