இன்று தாக்கலாகும் மத்திய வரவு செலவுத் திட்டம் முதல் தொடரும் இந்திய அணியின் வெற்றி வரை..! #TopNews

இன்று தாக்கலாகும் மத்திய வரவு செலவுத் திட்டம் முதல் தொடரும் இந்திய அணியின் வெற்றி வரை..! #TopNews

மத்திய பட்ஜெட்டை இன்று‌ தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீ‌தாராமன். பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 6 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என ஆய்வறிக்கையில் கணிப்பு
கொரனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 258 ஆக அதிகரிப்பு. சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை மீட்க நடவடிக்கைகள் தீவிரம்.
சீனாவின் வுஹான் மாநிலத்தில் இருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்டது சிறப்பு விமானம். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் தயார்.

கொரனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு. வதந்திகளைக் கண்டு பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது. முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக புதிய தேர்ச்சி பட்டியல் வெளியீடு.

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு. மறு உத்தரவு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற டெல்லி கீழமை நீதிமன்றம் தடை
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது பிரிட்டன். புதிய தொடக்கம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் பெருமிதம்

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி. சூப்பர் ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், எளிதாக வென்றது இந்தியா.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh