தமிழகத்தையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி‌ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் போக்சோ நீதிமன்றம்‌ இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பரில் நிறைவு பெற்ற நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளிக்க இருக்கிறார்.

“நாட்டின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் உயரும்”- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் 
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக குடியிருப்பில் பணி செய்த லிஃப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாபு என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்ட நிலையில் மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh