சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி‌ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று போக்சோ நீதிமன்றம்‌ இன்று தீர்ப்பளித்துள்ளது.

11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பரில் நிறைவுப் பெற்ற நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று தீப்பளித்தார். இதில், தோட்டக்காரர் குணசேகரன் என்பவரை தவிர மற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தெரிவித்தார்.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக குடியிருப்பில் பணி செய்த லிஃப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாபு என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்ட நிலையில் மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு என்ன தண்டனை என்பது சிறிது நேரத்தில் தெரிய வரும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh