பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து..!

பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து..!

கொடைக்கானல் அருகே பூங்காவில் உள்ள ராட்டினம் சுற்றுலா பயணிகளுடன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர்படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வானிலை ஆய்வக சாலை அருகே தனியார் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் உள்ள ராட்டினத்தில் வாலிபர்கள் ஏறி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, ராட்டினம் உறுதி தன்மை இழந்து காணப்பட்டதால் அது மேலிருந்து அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

விழுந்த ராட்டினத்தின் அடியில் இருந்த இளைஞர்கள் மூன்று பேரும் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், விரைந்து வந்த அவர்கள் உள்ளே சிக்கியிருந்தவர்களை படுகாயத்துடன் மீட்டனர்.

குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கவரும் அந்த பூங்காவில் உள்ள ராட்டினங்கள், மற்றும் மற்ற விளையாட்டு பொருட்களின் உறுதி தன்மையை பரிசோதனை செய்து, சுற்றுலா பயணிகள் உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கோட்டாட்சியர் சுரேந்திரன் கூறுகையில், குறிப்பிட்ட பூங்கா ஆய்வுக்குட்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh