மர்ம விலங்கு கொடூரமாக தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழப்பு – அச்சத்தில் கிராமமக்கள்

மர்ம விலங்கு கொடூரமாக தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழப்பு – அச்சத்தில் கிராமமக்கள்

விழுப்புரம் அருகே மர்ம விலங்கு தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அசப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி[55]. இவர் 50க்கும் மேற்பட்ட செம்மரி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல் ஆடுகளை மேய்த்துவிட்டு தனது வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை ஆடுகளை மேச்சலுக்கு ஓட்டிச்செல்ல சுப்ரமணி பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம விலங்கு கொடூரமாக தாக்கியதில் 28 ஆடுகள் இறந்து கிடந்ததாக தெரிகிறது. இதில் ஒரு ஆட்டை முழுவதும் கடித்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது.
இது போல் ஆடுகளை கொடூரமாக கொன்றது, சிறுத்தை போன்ற விலங்காகத்தான் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து கால் நடை துறை மருத்துவர்கள், மரக்காணம் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh