‘என் மனைவி குளிப்பதை காணொளி எடுத்து மிரட்டியதால் கொலை செய்தேன்’ – கணவர் வாக்குமூலம்…!

‘என் மனைவி குளிப்பதை காணொளி எடுத்து மிரட்டியதால் கொலை செய்தேன்’ – கணவர் வாக்குமூலம்…!

கோவில்பட்டி அருகே மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியவரை கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில், வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணையில், இறந்தவர் கயத்தாறையடுத்த கம்மாப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மில்டன்ராஜ்(35) என்பதும் இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும், அமிஷன் என்ற 3வயது மகனும் இருப்பதும் தெரியவந்தது.

கடந்த 25ந்தேதி கம்மப்பட்டி அருகேயுள்ள வெள்ளாளங்கோட்டையில் உள்ள கிறிஸ்துவ ஆலய திருவிழாவிற்கு செல்வதாக மில்டன்ராஜ் வீட்டில் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மில்டன் ராஜுக்கு அதே ஊரைச் சேர்ந்த விஜயன் என்ற கொத்தனார் கடைசியாக கால் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விஜயனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

போலீசாரிடம் விஜயன் கொடுத்த வாக்குமூலத்தில் “மில்டன் ராஜ் என்னுடைய மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். அதனால் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்து விட்டு வீடியோ மற்றும் போட்டோக்களை அழித்து விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh