மணம் ஆவதற்கு முன்பே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி – காவல் துறையினர் முன்னிலையில் கல்யாணம்

மணம் ஆவதற்கு முன்பே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி – காவல் துறையினர் முன்னிலையில் கல்யாணம்

குழந்தை பெற்ற கல்லூரி மாணவிக்கு பிரசவத்தன்றே திருமணமும் நடைபெற்றுள்ளது.
திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன். இவரது மகள் கோகிலா(20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கோகிலா திடீரென்று கர்ப்பமாகியுள்ளார். இதனால் பயந்துபோன கோகிலா, அதனை வீட்டில் கூறாமல் மூடிமறைத்துள்ளார். இதனிடையே கல்லூரிக்கும் இயல்பாக சென்று வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் நிறைமாத கர்ப்பம் அடைந்த நிலையில் நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அதனையறிந்த அவரது உறவினர்கள் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றதால் அவரது பெற்றோர் இது தொடர்பாக ஒலக்கூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பரமசிவம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh