விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலைய கழிவறையில் தற்கொலை

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலைய கழிவறையில் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி தங்க நாணயத்தை கொடுத்து ‌25 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணைக்காக, கே.வி.குப்பத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரைத் தேடி காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அஜித்குமாரின் தந்தை மகேந்திரன் மற்றும் அண்ணன் பாண்டியன் ஆகியோரை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அஜித்குமாரும் காவல் நிலையத்துக்கு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கழிவறைக்குச் சென்ற மகேந்திரன் தான் வைத்திருந்த துண்டைப் பயன்படுத்தி சன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh