பிப். 14ம் தேதி தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல்

பிப். 14ம் தேதி தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல்

வரும் 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டம் தொடங்கும் அன்றே நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதியமைச்சரும் ஆன ஒ பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகி உள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)ன் கீழ் 2020 -2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் நாள் குறித்துள்ளார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh