எழுத்து தேர்வில் முறைகேடு : கையெழுத்து மூலம் சிக்கிய சிஎஸ்எப் காவலர் பணி நீக்கம்

எழுத்து தேர்வில் முறைகேடு : கையெழுத்து மூலம் சிக்கிய சிஎஸ்எப் காவலர் பணி நீக்கம்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த சிஎஸ்எப் காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதனை பாதுகாக்க மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அசாமை சேர்ந்த ஒருவர் இங்கு பாதுகாப்பு பணியில் காவலராக இருந்து வந்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் இசை வெளியீடு ? – ‘சூரரைப் போற்று’ அப்டேட் 
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்து பின்பு உடல்தகுதியில் தேர்ச்சி அடைந்து மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு பணியமர்த்தப்பட்டார். பின்னர் பயிற்சியின் போது வைக்கப்பட்ட தேர்வில், சரிவர தேர்ச்சி பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சி குழுவினர் சந்தேகமடைந்து பயிற்சியின்போது எழுதப்பட்ட தேர்வின் கையெழுத்தையும் முதலில் பணியில் சேருவதற்காக எழுதப்பட்ட தேர்வின் கையெழுத்தையும் சரிபார்ப்பதற்காக சிம்லாவில் உள்ள இந்திய அரசு கையெழுத்து சரிபார்க்கும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ1 கோடி’ – ஜாக்கிசான் உருக்கமான பதிவு 
அங்கு சோதனை செய்ததில் இரு கையெழுத்தும் வெவ்வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பணியிலிருந்து கடந்த 27-ஆம் தேதி அவர் நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மகேந்திரகிரியில் உள்ள தொழிற் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் பணகுடி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh